கங்குவா படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு இத்தனைக் கோடி நஷ்டமா?
சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் பெரிய பில்டப்புகளுக்கு மத்தியில் ரிலிஸாகி படுதோல்விப் படமானது. சூர்யாவின் மூன்று ஆண்டுகால உழைப்பு வீணாக்கப்பட்டுள்ளது என அவரின் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். சூர்யா கடைசியாக திரையரங்குகளில் ஒரு வணிக ரீதியான வெற்றிப்படம் கொடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது எனப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்த படம் மொத்தமாக திரையரங்குகள் மூலமாக 100 கோடி ரூபாய் அளவுக்குக் கூட வசூலிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இது ஒருபக்கம் என்றால் படத்தின் மோசமான உருவாக்கத்தால் கடுப்பான ரசிகர்கள் சமூகவலைதளங்களில் படத்தைக் கடுமையாக கேலி செய்தனர். சூர்யா, சிவா மற்றும் ஞானவேல் ராஜா ஆகிய மூவரையும் பல விதங்களில் கேலி செய்து வந்தனர். ஆனாலும் இந்த படம் தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய் அளவுக்குக் கூட வசூல் செய்யவில்லை என சொல்லப்படுகிறது.
இந்த படத்தைத் தயாரித்த வகையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சுமார் 140 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார். இந்த நஷ்டத்தை சரிகட்ட சூர்யா அடுத்து ஞானவேல் ராஜாவுக்கு மீண்டும் படங்கள் நடித்துத் தரவுள்ளதாக சொல்லப்படுகிறது.