சிவகார்த்திகேயன் 25 படத்தின் டைட்டில் இதுதானா?... பிரபலம் பகிர்ந்த தகவல்!
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருந்த புறநானூறு திரைப்படம் சூர்யாவின் தலையீட்டால் கைவிடப்பட்டது. அந்த கதை இந்தி திணிப்பு எதிர்ப்பைப் பற்றிய படம் என்பதால் அதில் நடிக்க சூர்யா தயங்கியதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் சூர்யா நேரடி இந்திப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் அதே கதையை சிவகார்த்திகேயனை வைத்து டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்க உள்ளார். அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் ஆண்டு இறுதியில் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட புறநானூறு என்பது மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த வகையில் தற்போது படத்துக்கு 1965 எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். படம் 1960 களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.