செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2020 (16:19 IST)

இயக்குனர்களுக்கு சூப்பராக சீன் சொல்லும் சிவகார்த்திகேயன்… எல்லாம் எங்கிருந்து சுட்டது தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சில அருமையான சீன்களை சொல்லி கதையில் சேர்த்துக் கொள்ள சொல்வதாக ஒரு செய்தி சொல்லப்பட்டு வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமல்லாமல் பாடல் எழுதுவது போன்ற கிரியேட்டிவ்வான விஷயங்களிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இயக்குனர்களுக்கு கதைக்கு தேவையான சில காட்சிகளை சொல்வதையும் வழக்கமாக வைத்துள்ளாராம். ஆனால் இது பல உதவி இயக்குனர்களுக்கு அதிர்ச்சியை அளித்து வருகிறதாம்.

ஏனென்றால் இந்த காட்சிகள் எல்லாம் அவர்கள் சிவகார்த்திகேயனுக்கு தங்கள் கதையை சொல்லும் போது சொன்ன காட்சிகளாம். அந்த கதைகள் பிடிக்காவிட்டாலும், அதிலுள்ள சிறப்பானக் காட்சிகளை லேசாக மாற்றி தான் நடிக்கும் படங்களில் சொருகி விடுகிறாராம்.

Source வலைப்பேச்சு