ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2020 (16:01 IST)

முருகதாஸ் கதையில் விஜய்க்கு பிடிக்காத பகுதி… நகத்தைக் கடிக்கும் முருகதாஸ்!

விஜய் 65 படத்தின் கதையின் பின் பகுதியில் விஜய் திருப்தி இல்லை எனக் கூறியிருந்த நிலையில் அதற்கான பணிகளில் முருகதாஸ் இறங்கியுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் இயக்க உள்ளார் . இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த படம் பொங்கலுக்குப் பின்னர்தான் ஆரம்பிக்கப் பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக முருகதாஸ் சொன்ன கதையில் இடைவேளைக்குப் பின் வரும் பகுதிகளில் தனக்கு முழு திருப்தி இல்லை என விஜய் சொன்ன நிலையில் அதற்காக கதையை மீண்டும் திருத்தி எழுதி போய் கூறியுள்ளார் முருகதாஸ். ஆனால் அப்போதும் விஜய்க்கு முழு திருப்தி இல்லையாம். இதனால் தனது எழுத்தாளர்கள் மற்றும் உதவியாளர்களை அழைத்து தீவிரமாக மறுபரிசீலனை செய்து வருகிறாராம் முருகதாஸ்.