விமல் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதும் விஜய் சேதுபதி! இயக்குனர் இவர்தான்!
நடிகர் விஜய் சேதுபதி விமல் நடிக்கும் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் ஆகியவற்றை எழுதியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இருக்கும் கிரியேட்டிவ்வான நடிகர்கள் பட்டியலில் கமல், சிம்பு, தனுஷ் ஆகியோருக்கு முக்கியமான இடம் உண்டு. அந்த வரிசையில் இப்போது நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார். ஏற்கனவே ஆரஞ்சு மிட்டாய் மற்றும் பக்ரீத் ஆகிய படங்களின் வசனப் பகுதியில் வேலை செய்த அவர், இப்போது ஒரு படத்துக்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை எழுதவுள்ளார்.
நடிகர் விமல் நடிக்கும் குலசாமி என்ற படத்துக்கு இந்த மூன்று பொறுப்பையும் அவர் ஏற்றுள்ளார். இந்த படத்தை தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த சரவண சக்தி இயக்க உள்ளார்.