செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 29 அக்டோபர் 2022 (09:09 IST)

ஒரு வாரத்துக்குள் இந்த நிலைமையா?...பிரின்ஸ் படம் இப்போது எத்தனை தியேட்டர்களில் ஓடுது தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பிரின்ஸ்’  திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் படம் வெளியாகி பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

ஆனாலும் முதல்நாளில் இந்த படம் சுமார் 7 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. சனி, ஞாயிறு மற்றும் தீபாவளி நாளான திங்கள் கிழமை இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகமாகும் என சொல்லப்படுகிறது. ஆனாலும் விடுமுறை நாட்களில் கூட இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை வாங்கிய அன்புச்செழியனுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்றால் தெலுங்கில் இந்த படம் சுத்தமாக படுத்துவிட்டதாம்.

இந்நிலையில் பிரின்ஸ் திரைப்படம் ரிலீஸாகி இன்னும் 10 நாட்கள் கூட ஆகாத நிலையில் ரிலீஸ் ஆன திரையரங்குகளில் சுமார் 90 சதவீத திரைகளில் இருந்து தூக்கிவிட்டார்களாம். இப்போது 50க்கும் குறைவான ஸ்க்ரீன்களில் மட்டுமே ஓடுவதாகவும், அதுவும் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள்தான் என்று சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனின் மிக மோசமான தோல்விப் படமாக ப்ரின்ஸ் அமைந்துள்ளது.