’எங்க வீட்டுப் பிள்ளை’ – சிவகார்த்திக்கேயன் படத்தின் தலைப்பு இதுதானா ?

Last Modified வியாழன், 20 ஜூன் 2019 (17:09 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகும் படத்துக்கு எங்க வீட்டுப்பிள்ளை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயனை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாண்டிராஜ். மெரினாப் படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தைக் கொடுத்து அவரது திரைவாழ்க்கைக்கு அச்சாரமிட்டார். அதன் பின்னர் இருவரும் இணைந்து கேடிபில்லா கில்லாடி ரங்கா படத்தில் பணிபுரிந்தனர்.

அதன் பின் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்திருந்த நிலையில் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். இப்போது எஸ் கே 16 எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் இந்தப்படத்துக்கு எங்க வீட்டுப் பிள்ளை என எம்.ஜி.ஆர் படத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இதை படக்குழு உறுதி செய்யவில்லை. இப்போது படப்பிடிப்பில் கவனம் செலுத்துவதால் தலைப்பு குறித்து முடிவு எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :