1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2022 (19:18 IST)

''பிக்பாஸ்-6 சீசன் '' நிகழ்ச்சியில் கமலுடன் இவரும் தொகுப்பாளராம் !

bigboss
விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 வருடங்களாக நடைபெற்று வருகிறது என்பது ஐந்து சீசன்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த ஐந்து சீசங்களிலும் கமல் தொகுப்பாளராக இருந்த நிலையில், கடந்தாண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சிம்பு தொகுப்பாளராக வந்தார்.

இந்த நிலையில் 6வது சீசன் எப்போது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ள நிலையில் அதற்கான விடையும் தற்போது கிடைத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6வது சீசன் வரும் அக்டோபர் இரண்டாவது வாரம் தொடங்க இருப்பதாகவும் இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் தேர்வு அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
simbhu

ஏற்கனவே,சினிமா பிரபலங்கள் இதில் பங்கேற்கலாம் என தகவல் வெளியான நிலையில், இதில் யார் யார் கலந்துகொள்ளப் போகிறார்கள் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.