1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2022 (21:38 IST)

''தேவர்மகன்-2 -''ல் கமலுடன் இணையும் 'விக்ரம்' பட நடிகர்கள் !

kamalhasan
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவரது ராஜ்கமல் பிலிம் இண்டர் நேசனல் தயாரிப்பில் , சமீபத்தில் வெளியான விக்ரம்  சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

இப்படத்தை அடுத்து இந்தியன்-2 படத்தைத் தயாரிக்கவுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில், கமலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், விஸ்வரூபம் படத்தின் எடிட்டர் மகேஷ்  நாராயணன் இப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இவர் மலையாள சினிமாவில் ஒளிபதிவாளரும் மகேஷ் நாராயணன் பணியாற்றியுள்ளார்.மாலிக் படத்தின் இயக்குனரும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் அநேகமான தேவர்மகன் -2 ஆக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  .

இ ந் நிலையில், தேவர்மகன் -2 படத்தில் கமலுடன் இணைந்து ,விக்ரம் படத்தில் நடித்த விஜய்சேதுபதி மற்றும் பகத்பாசில் இருவரும் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.