1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 12 மார்ச் 2023 (09:52 IST)

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் க்ளாஷ் விடும் கார்த்தி? – ஜப்பான் vs மாவீரன்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பின் போது இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதைப் படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது. தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் சிங்கிள் பாடலான “சீனா சீனா” என்ற பாடல்  ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இந்த படத்தை தமிழ்கத்தின் முன்னணி விநியோக நிறுவனமாக தற்போது விளங்கிவரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்ற உள்ளதாகவும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பக்ரீத்துக்கு சோலோ ரிலீஸாக வரும் என நினைத்த நிலையில், இப்போது கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும் அதே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கடந்த தீபாவளிக்கு பிரின்ஸ் மற்றும் சர்தார் ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகின என்பது குறிப்பிடத்தக்கது.