1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2023 (10:59 IST)

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Sivakarthikeyan
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் ஏற்கனவே நான்கு படங்கள் தயாரித்து உள்ள நிலையில் தற்போது ஐந்தாவது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான எஸ்.கே. ப்ரொடெக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் சூரி நாயகனாக நடிக்க உள்ளார் என்பதும் மலையாள நடிகை அன்னாபென் நாயகியாக நடிக்க உள்ளார் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நயன்தாரா தயாரிப்பில் உருவான ’பெபிள்ஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கிய பிஎஸ் வினோத் ராஜ் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்க இருக்கும் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran