வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (18:19 IST)

‘டான்’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 
‘டான்’ படத்தின் சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை கம்போஸ் செய்து அனிருத் பாடியுள்ளார் என்பதும் இந்த பாடலை ரோகேஷ் என்பவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த பாடலின் ஒரு சில காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது