திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 14 மார்ச் 2022 (19:35 IST)

ரஜினியின் ‘தலைவர் 169’ படத்தில் சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன்?

ரஜினியின் ‘தலைவர் 169’ படத்தில் சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க இருக்கிறார் என சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
 
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ரஜினியின் மகளாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
 இந்த தகவல் விரைவில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் டாக்டர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்களில் நடித்து உள்ளனர்