திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 16 செப்டம்பர் 2021 (12:23 IST)

உத்தர பிரதேச தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி!

2022 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடக்க உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 100 வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தல் 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் என சொல்லலாம். அதனால் இந்த தேர்தலை வெற்றி பெற பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடையே பலத்த போட்டி உள்ளது.

இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடவுள்ள 100 வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இவர்கள் பின்னர் மாற்றப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.