1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 22 ஜூலை 2023 (09:45 IST)

இந்த படம் கண்டிப்பா 100 கோடி வசூல் பண்ணும்.. அயலான் படம் பற்றி புகழ்ந்த பிரபலம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.  இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த படம் பைனான்ஸ் பிரச்சனைகளில் சிக்கி ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது. இப்போது 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ரிலீஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ளார் படத்தொகுப்பாளர் ரூபன். ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் இதுபற்றி பேசியுள்ள அவர் “அயலான் திரைப்படம் ரிலீஸானால் கண்டிப்பாக 100 கோடி ரூபாய் வசூல் அள்ளும்” என நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு தீபாவளிக்குக் கார்த்தியின் ஜப்பான், சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா 2 ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன.