திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 20 ஜூலை 2023 (07:20 IST)

மீண்டும் காமெடியனாக நடிப்பதில் தயக்கம் இல்லை… சந்தானம் ஒபன் டாக்!

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்து வருவதால்  சந்தானத்தைக் கதாநாயகனாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகியுள்ளது. ஆனால் பிடிவாதமாக கதாநாயகனாகதான் நடிப்பேன் என சந்தானம் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் நடித்து அடுத்தடுத்து ரிலீஸாகும் படங்கள் தோல்வியை சந்தித்து வருகின்றன. அடுத்து டி டி ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் ரிலீஸ் ஜூலை 28 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை எனக் கூறியுள்ளார்.

அதில் “நல்ல கதை அமைந்து எனக்கு தகுந்த வேடம் கிடைத்தால் மீண்டும் காமெடியனாக நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இன்றைய சினிமாவில் காமெடி டிராக் இல்லை. ஹீரோவும் காமெடியனும் சேர்ந்து பயணிக்கும் மல்டி ஸ்டார் ட்ரண்ட்தான் இருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.