ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 மே 2019 (12:19 IST)

ரஜினி ,சிறுத்தை சிவா திடீர் சந்திப்பு – உருவாகிறதா புதுக்கூட்டணி !

ரஜினி தற்போது தனது இல்லத்தில் இயக்குனர் சிறுத்தை சிவாவை சந்தித்து பேசி வருகிறார்.

ரஜினி அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவாவோடு தற்போது தனது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தர்பார் படத்தில் தற்போது நடித்துவரும் ரஜினி சிவாவோடு இப்போது பேச்சு வார்த்தை நடத்துவது இருவரும் இணைந்து படம் பண்ணுவார்களா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சிவா, அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகியப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். சிவா இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா, சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது ரஜினி சந்தித்திருப்பதால் விரைவில் நல்ல முடிவு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.