கணவரை கட்டியணைத்து முத்தமிட்டு வழியனுப்பிய விஜய் பட நடிகை!

Last Updated: சனி, 25 மே 2019 (15:15 IST)
மும்பையைச் சேர்ந்த பாலிவுட் நடிகையான இலியானா டி க்ரூஸ், தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். தமிழில் ‘கேடி’ மற்றும்  தளபதி விஜய் நடிப்பில் வந்த ‘நண்பன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இலியானா தொடர்ந்து தமிழில் வாய்ப்பு இல்லாததால், தற்போது பாலிவுட்டில் நடித்துவருகிறார். 
 
எப்போதும், சமூக வலைதளங்களில் தனது பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவார்.  அண்மையில், தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல் கேட்டு அதிர்ச்சியுற்றார். 


 
இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால் வெளிநாட்டு புகைப்படக் கலைஞரான கணவர் ஆண்ட்ரூ நீபானை விமான நிலையத்தில் வைத்து கட்டியணைத்து ஆஸ்திரேலியாவுக்கு வழியனுப்பி வைத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :