1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2024 (19:26 IST)

நடிகை சுனைனாவுக்கு நிச்சயதார்த்தம்.. முடிவுக்கு வந்தது 2 நாள் பரபரப்பு..!

நடிகை சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கையுடன் ஒரு ஆண் கை இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்திருந்த நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் என்று பரபரப்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் சுனைனா என்றும் அவர் தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த இன்ஸ்டாகிராம் போஸ்டில் தனக்கு திருமணம் என்பதை மறைமுகமாக அறிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக கூறி நிச்சயதார்த்த மோதிரத்துடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
இருப்பினும் அவர் திருமணம் செய்ய போகும் நபர் யார் என்பதை அவர் அறிவிக்கவில்லை. இது குறித்த கேள்விகள் எழுந்து வரும் நிலையில் திருமணம் செய்ய போகும் நபர் யார்? திருமணம் எப்போது? என்பது குறித்து விரைவில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva