1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஜூன் 2024 (10:18 IST)

எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்குது: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீப் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பிரதீப் என்பதும் அவரை மாயா - பூர்ணிமா குரூப் சதி செய்து வெளியேற்றி விட்டதை அடுத்து அந்த நிகழ்ச்சி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போதிலும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்த நிலையில் அவர் சினிமாவிலும் பிசியாகி விட்டார் என்ற செய்திகள் வெளியானது. 
 
இந்த நிலையில் சற்று முன் பிரதீப் தனது சமூக வலைதள பக்கத்தில் தனக்கு திருமணம் நிச்சயதார்த்தம் ஆகி உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்து ’எனக்கெல்லாம் திருமணம் நடக்காது என்று நினைத்தேன், ஆனால் பரவாயில்லை, எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்காங்க, இது 90ஸ் கிட்ஸ்களின் சாதனை என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
Edited by Mahendran