வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2024 (12:06 IST)

பிரபல யுடியூபரை மணக்கிறாரா நடிகை சுனைனா?

தமிழில் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, தெறி, சில்லுக் கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சுனைனா. ஆனால் இப்போது அவர்க்கு சரியான வாய்ப்புகள் இல்லாமல் உள்ளாட். இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கையுடன் ஒரு ஆண் கை இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்திருந்த நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் என்று பரபரப்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

அதன் பின்னர் அவர் மீண்டும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக தெரிவித்திருந்தார். இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  ஆனால் மணமகன் யார் என்பதை அறிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் பிரபல யுடியூபரான கலீத் அல் அம்ரி என்பவரைதான் மணமுடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. சுனைனா பகிர்ந்த அதே புகைப்படத்தை அவரும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.  கலீத் சமீபத்தில்தான் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.