திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 14 ஜூலை 2021 (16:39 IST)

ஆற்றில் விழுந்த பாடகர்...சடலமாக மீட்பு...ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல பாடகர் சுற்றுலா சென்ற இடத்தில் தவறி ஆற்றில் விழுந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரபல பஞ்சாலி பாடலர் மன்மீத் சிங். இவர் சமீபத்தில் தனது நண்பர்களுடன் இணிந்து தர்ம்சாலாபில் இருந்து கரேரி என்ற  என்ற இடத்திற்குச் சுற்றுலா சென்றார்.

அங்கு கனமழை பெய்த நிலையில் ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடியது. அப்போதும் கால் வழுக்கி கரேரி ஆற்றில் விழுந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதையடுத்து பாடகரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு நாட்களாக மன்மீத் சிங்கை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், இன்று அவரது உடல் ஆற்றுப் பகுதில் கண்டெடுக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரப்பரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது