திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 4 ஜூலை 2021 (18:36 IST)

பாடகியாகவும் மாறிய பிக்பாஸ் லாஸ்லியா!

பாடகியாகவும் மாறிய பிக்பாஸ் லாஸ்லியா!
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா என்பதும் அவர் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஹர்பஜன் சிங் நடித்து முடித்துள்ள ’பிரண்ட்ஷிப்’ உள்பட மூன்று படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பதும் இந்த மூன்று படங்களும் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் லாஸ்லியா நடித்து முடித்துள்ள ’பிரண்ட்ஷிப்’ படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் இந்த பாடலின் ஒலிப்பதிவு குறித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் நடிகையாக மட்டுமின்றி அவர் தற்போது பாடகியாகவும் மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அவர் சில பாடல்களைப் பாடி சக போட்டியாளர்களை மகிழ்வித்தார் என்பதும் அவர் அடிப்படையில் ஒரு செய்தி வாசிப்பாளர் என்பதும் தெரிந்ததே