திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 ஜூலை 2021 (12:06 IST)

வாகனங்கள், கடைகளை அடித்து சென்ற வெள்ளம்! – இமாச்சல பிரதேசத்தில் கரும் வெள்ளம்!

இமாச்சல பிரதேசத்தில் கடும் வெள்ளம் காரணமாக வாகனங்கள், கடைகள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் கடும் மழை காரணமாக அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத திடீர் மழையால் இமாச்சல பிரதேசத்தின் சிம்லா மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தின் முக்கிய நகரமான தர்மசாலாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நதியோர பகுதிகளில் வெள்ளம் புகுந்து இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை அடித்து சென்றுள்ளது. மேலும் நதி ஒர பகுதிகளில் கரைகளில் அரிப்பு ஏற்பட்டதால் கடைகள் இடிந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. திடீர் வெள்ளபெருக்கால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.