ஆற்றில் விழுந்த பாடகர்… சடலமாக உடல் மீட்பு!

Last Modified புதன், 14 ஜூலை 2021 (16:38 IST)

பஞ்சாப்பின் பிரபல பாடகர் மன்மீத் சிங் ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பஞ்சாபி படகரான மன்மீத் சிங் சமீபத்தில் நண்பர்களுடன் தர்மசாலவுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் கரேரி ஆற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருந்ததால் அவரின் உடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதையடுத்து அவரைத் தேடும் பணிகள் நடந்த நிலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :