1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 மே 2024 (14:34 IST)

நடிகர் சிங்கம்புலி மருத்துவமனையில் அனுமதியா? தீயாய் பரவி வரும் வீடியோ..!

நடிகர் சிங்கம்புலி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது சிகிச்சைக்கு பணம் கேட்டுள்ளதாகவும் முகநூல் பக்கம் ஒன்றில் கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நடிகர் மற்றும் இயக்குனர் சிங்கம் புலி திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக முகநூல் பக்கம் ஒன்றில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருப்பதாகவும் எனவே அவருக்கு பணம் கொடுத்த உதவ வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுத்துள்ளது. 
 
இந்த நிலையில் நடிகர் சிங்கம்புலி தனது வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது பெயரில் போலியான ஒரு விளம்பர அறிவிப்பு வெளியாகி உள்ளது என்றும் தனக்கு உடல் நல குறைவு எதுவும் இல்லை என்றும் தான் யாரிடமும் பணம் கேட்கவில்லை என்றும் எனவே போலியான விளம்பரத்தை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் அவரது நிஜமான முகநூல் கணக்கின் அக்கவுண்ட்டை தெரிவித்து எனக்கு இந்த ஒரே ஒரு அக்கவுண்ட் மட்டுமே உள்ளது என்றும் எதுவாக இருந்தாலும் என்னிடம் நேரடியாக ஒரு வார்த்தை பேசி விட்டு கட்ட நடவடிக்கை எடுங்கள் என்றும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். 
 
Edited by Siva