திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஏப்ரல் 2024 (15:44 IST)

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி.. மாநில அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை..!

Shawarma
மகாராஷ்டிரா மாநிலத்தில் 12 பேர் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில அரசு இது குறித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்கனவே சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட சிலர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் ஒரு சிலர் உயிரிழந்தார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோரேகான் என்ற பகுதியில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு திடீரென வாந்தி ஏற்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

பாதிக்கப்பட்ட 12 பேர்களில் ஒன்பது பேர்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பி விட்டதாகவும் மூன்று பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு உடனடியாக மாநிலத்தில் உள்ள அனைத்து சிக்கன் ஷவர்மா கடைகளிலும் சோதனை செய்யவும் அங்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சிக்கன் தரமானதாக இருக்கிறதா என்பதை கண்டறியவும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Mahendran