1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified புதன், 24 மே 2023 (22:37 IST)

சிம்புவுக்கு ஜோடியான சூர்யா பட நடிகை?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு. இவரது 48 வது படத்தின் ஹீரோயின் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான   மாநாடு, பத்து தல ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.

இதையடுத்து, அவர்  கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.

அதன்படி,  சிம்பு நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்.

இந்த படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்துக்காக லொகேஷன் தேடுதல் உள்ளிட்ட முன் தயாரிப்புப் பணிகளை இயக்குனர் இப்போது முடித்துள்ளதாக கூறப்படும் நிலையில் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திஷா பதானியா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
disha patani

தற்போது திஷா பதானி சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா உடன் கங்குவா என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.