திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 14 நவம்பர் 2018 (16:41 IST)

ஒரு ஆணியும் புடுங்க முடியாது - சிம்பு ஆவேசம்

செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து  சுந்தர்.சி இயக்கத்தில் "வந்தா ராஜாவா தான் வருவேன்" படத்தில் சிம்பு நடித்து வருகிறார். 
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது படக்குழு. 
 
இந்நிலையில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பட பிரச்னையில் விநியோகஸ்தர்களுக்கு நடிகர் சிம்பு தீர்வு காண வேண்டும் எனவும் . அதுவரை "வந்தா ராஜாவா தான் வருவேன்" படம் ரிலீசாகாது என்று தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பில் படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளனர் .
 
இவ்விவகாரத்தில் சிம்புவுக்கு "ரெட் கார்ட்" போடவும் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்திருப்பதாக வெளியான தகவல் சிம்பு ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் நடிகர் சிம்பு ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில். "வந்தா ராஜாவா தான் வருவேன்"  ரிலீஸ் பிரச்னை பற்றி கவலைப்பட வேண்டாம்.
 
எந்த ஒரு தனி மனிதரின் முடிவும் என்னை ஓரங்கட்டிவிட முடியாது. ஒரு குழுவாக, அமைப்பாக எடுக்கப்பட்ட முடிவுக்கு சரியான முறையில் தீர்வு காணப்படும். ஆத்திரத்தில் யாரும் யாரையும் புண்படுத்த வேண்டாம். 
 
அன்பை பகிருங்கள். தொடர்ந்து நீங்கள் எனக்கு கொடுக்கும் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இல்லை அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
https://twitter.com/strfans?lang=en