சிம்புவுக்கு அந்த பெண்ணுடன் தான் திருமணம்! டி.ராஜேந்தர் அதிரடி!

Last Updated: சனி, 20 ஏப்ரல் 2019 (11:02 IST)
இயக்குநர் டி.ராஜேந்தர் மகனும், லிட்டில்  சூப்பர் ஸ்டார் சிம்புவின் சகோதரருமான, குறளரசனின் திருமணம் இப்போதே களைகட்ட ஆரம்பித்துவிட்டதை அடுத்து சிம்புவின் திருமணம் எப்போது என்ற கேள்வியை ரசிகர்கள் விடாமல் கேட்டு வருகின்றனர். 


 
சமீபத்தில் முஸ்லீம் மதத்திற்கு மாறிதையடுத்து தற்போது குறளரசனுக்கும் நபீலா அகமது என்ற பெண்ணுக்கும் வரும் 26ஆம் தேதி நிக்காஹ் நடைபெறுகிறது. இதையடுத்து வரும் 29ஆம் தேதி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் பிரமாண்டமான அளவில்  திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. 
 
தனது இளைய மகளின் திருமணத்திற்காக பிரபல நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் விஜயகாந்த், ரஜினிகாந்த்  என  சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களை  நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். அந்தவகையில்  சமீபத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலினை  நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சிம்புவின் திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எல்லோரும் என் மூத்த மகன் சிம்புவின் திருமணம் குறித்து கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். 


 
வெகு விரைவில் அந்த மகிழ்ச்சியான தருணத்திற்காக காத்திருக்கிறோம். கண்டிப்பாக சிம்பு நடிகையை திருமணம் செய்து கொள்ள மாட்டார். அவருக்கு பிடித்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்வார். மேலும், சிம்புவிற்கு ஏற்ற பெண் கிடைத்தால் உடனே திருமணம் செய்து வைப்போம் கடவுள் புண்ணியத்தில் அது நிச்சயம் கூடிய விரைவில் நடக்கும் என்று அவர் கூறியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :