வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 7 மார்ச் 2019 (15:46 IST)

டி.ராஜேந்தர் வீட்டில் டும் டும் டும்! தடபுடலாக நடக்கும் ஏற்பாடு.! பெண் யாருன்னு பாருங்க!

இயக்குனரும் , நடிகருமான டி.ராஜேந்திருக்கு இலக்கியா என்ற மகளும், சிலம்பரசன், குறளரசன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். நடிகர் சிலம்பரசன் தனது தந்தையைப் போன்றே தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார்.


 
அவரை பின்தொடர்ந்து வரும்  அவரது தம்பி குறளரசன் சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படத்தில்  கதாநாயகியின் தம்பியாக நடித்திருந்தார். மேலும், அண்ணன் சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
 
இந்த நிலையில் தற்போது குறளரசனுக்கு திருமண ஏற்பாடுகள் படு மும்மரமாக நடைபெற்று வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் உலாவந்துகொண்டிருக்கிறது. 


 
சமீபத்தில் குறளரசன்  இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அதற்கான உண்மைக்காரணம்  இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வருகிறார் என்றும்  பேச்சு அடிபட்டது. எனவே குறளரசன் கூடிய விரைவில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை தான் திருமணம் செய்யவிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டுவருகிறது.

ஆகவே  டி.ஆர் வீட்டிலிருந்து கூடியவிரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.