திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (15:57 IST)

விண்ணைத்தாண்டி வருவாயா … வெளியாகி 11 ஆண்டுகள்!

நடிகர் சிம்பு மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

சிம்புவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என்றால் அது விண்னைத் தாண்டி வருவாயாதான். அந்த அளவுக்கு அவரிடம் இருந்து சிறப்பான நடிப்பை வாங்கியிருப்பார் கௌதம் மேனன். அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் ரஹ்மானோடு அவர் முதல் முதலாகக் கூட்டணி அமைத்த படம் அதுதான். அதற்கேற்றார்போல பாடல்களும் எவர் க்ரீன் ஹிட்டாகின.

இந்த படம் 2010 ஆம் ஆண்டு இதே நாளில்தான் வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்த படத்தின் 11 ஆம் ஆண்டை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இப்போது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக சிம்பு, கௌதம் மேனன் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பாக நதியில் நீராடும் சூரியன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.