1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona virus cases in India increases

தலைதூக்கும் கொரோனா பாதிப்பு - இந்தியாவின் இன்றைய நிலவரம்!

இந்தியா
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. 
 
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,577 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,10,63,491 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 120 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,56,825 ஆக உயர்ந்துள்ளது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 12,179 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 10,750,680 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,55,986 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
பாதாளம் நோக்கி பாயும் பங்குசந்தை புள்ளிகள்?! – முதலீட்டாளர்கள் அதிர்ச்சி