ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 6 மே 2019 (12:02 IST)

படத்திற்கு பஞ்சமில்லை... ஹிட் கொடுப்பாரா சிம்பு?

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துக்கொண்டு முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. 
 
இவர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் தெலுங்கு படம் ஒன்று ரீமேக் செய்யப்பட்டு வந்தா ராஜாவாதான் வருவேன் என பெயரில் வெளியானது. இந்த படம் சிம்புவிற்கு வொர்க் அவுட் ஆகவில்லை. ஆம், எதிர்ப்பார்த்த வெற்றியை படம் அடைவில்லை. 
 
ஆனாலும், சிம்புவிற்கு படத்திற்கு பஞ்சமில்லை. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அடுத்து கௌதம் கார்த்திக்குடன் ‘முப்ஃடி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் இணைந்து நடிப்பதாக அறிவித்தார். 
இதை தொடர்ந்து ஐக் இயக்கத்தில் எம்.ஆர்.ராதா பயோபிக்கில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. இதெல்லாம் இருந்தாலும் சிம்பு ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுக்க விரும்புகிறாராம். 
 
எனவே, கமர்ஷியல் பட இயக்குனர் ஹரியுடன் ஒரு படத்தில் அவர் ஒப்பந்தமாக உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார். இந்த கூட்டணி ஏற்கனவே கோவில் படத்தின் மூலம் வெற்றிக்கூட்டணியாக இருக்க இந்த வெற்றி வரும் படத்திலும் தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.