புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 1 மே 2019 (20:52 IST)

சிம்பு திருமணம் எப்போது ? கண்ணீர் சிந்திய டி .ராஜேந்தர்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகி இன்று முன்னணி நடிகராக இருப்பவர் சிலம்பரசன். இவரது தம்பியும் இசையமைப்பாளருமான குறளரசன் தனது  நீண்டநாள் தோழியான நபீலா அகமதுவை கடந்த ஏப்ரல் 26 அம் தேதி  திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
 
இதுசம்பந்தமாக நேற்று பத்திரிக்கை அன்பர்களை சந்தித்து பேட்டு அளித்தார். அரசியல் சம்பந்தமான் கேள்விகளுக்கு பிறகு பதில்கூறுவதாகத் தெரிவித்தார்.
 
அதன்பின்னர் சிம்பு திருமணம் பற்றி கேட்கப்பட்டது. இந்தக் கேள்வியை என்னிடம் கேட்க வைத்த விதியின் மீதும் அந்தக் கடவுளின் மீதும் நான் கோபப்படுகிறேன் என்று கூறியவர். சிம்பு திருமணம் கடவுள் அருளால் விரைவில் நடக்கும் என்று கண்ணீர் சிந்தியபடி தெரிவித்தார்.