புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 27 ஏப்ரல் 2019 (11:17 IST)

அண்ணன் இல்லாம எப்படி? தம்பி திருமணத்தில் ஸ்டைலிஷ் சிம்பு

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய டி.ஆர் தனது தனித்துவமான நடிப்பால் தனி முத்திரை பதித்தவர். அவரது மகன்கள் சிம்பு மற்றும் மகன் குறளரசன்.
 
சிம்பு நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருக்கிறார். குறளரசனும் இது நம்ம ஆளு என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். சமீபத்தில் குறளரசன் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக தகவல் வெளியானது.
 
இந்நிலையில் குறளரசனின் திருமணம் இன்று நடந்து முடிந்தது. மிகவும் எளிமையான வகையில் திருமணம் நடந்து முடிந்தது. தம்பி திருமணத்தில் அண்ணன் இல்லாமல் எப்படி? சிம்பு திருமணத்தை கலைக்கட்ட செய்துள்ளார். 
 
தம்பி திருமணத்தில் சிம்பு ஸ்டைலாக காணப்படுகிறார். அவரது சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.