திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜூன் 2021 (09:04 IST)

மது அருந்துவதை நிறுத்தி ஒரு ஆண்டு ஆகிறது… மனம் திறந்த சிம்பு!

நடிகர் சிம்பு தான் மது அருந்துவதை நிறுத்தி ஒரு ஆண்டு ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டரில் ’மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் வரும் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவித்ததில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அறிவித்தபடி நேற்று . ’மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் பாடலின் ப்ரமோஷன் நிகழ்ச்சியாக டிவிட்டர் ஸ்பேஸில் படக்குழுவினர் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது பேசிய சிம்பு ‘நான் மது அருந்துவதை நிறுத்தி இன்றோடு ஒரு ஆண்டு ஆகிறது. பிரேம்ஜி என் கூட இருந்தும் நான் குடிக்காமல் இருப்பது மிகப்பெரிய விஷயம்தான்’ என கலகலப்பாக பேசியுள்ளார்.