1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 24 டிசம்பர் 2025 (14:10 IST)

அட்லி தயாரிப்பில் விக்ராந்த் நடிக்கும் வெப்சீரீஸ்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

அட்லி தயாரிப்பில் விக்ராந்த் நடிக்கும் வெப்சீரீஸ்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
திரைப்படங்களில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர் விக்ராந்த், முதன்முறையாக இணையத் தொடர் உலகில் அடியெடுத்து வைக்கிறார். அவர் நடித்துள்ள 'எல்பிடபுள்யூ - லவ் பியாண்ட் விக்கெட்' (LBW - Love Beyond Wicket) எனும் தொடர், வரும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு வெளியீடாக 'ஜியோ ஹாட்ஸ்டார்' ஓடிடி தளத்தில் நேரடியாகத் திரையிடப்பட உள்ளது.
 
இயக்குநர் அட்லீயின் 'அட்லீ ஃபேக்டரி' நிறுவனம் தயாரித்துள்ள இந்த தொடரை கணேஷ் கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ஒரு காலத்தில் நட்சத்திர கிரிக்கெட் வீரராக திகழ்ந்து, சில சிக்கல்களால் புகழை இழந்த ஒருவர், மீண்டும் ஒரு அணியை உருவாக்கி பயிற்சியாளராக எப்படி சாதிக்கிறார் என்பதே இத்தொடரின் மையக்கரு. 
 
விக்ராந்துடன் சிந்து ஷியாம், நியதி மற்றும் ஹரிஷ் உள்ளிட்டோர் முக்கியப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட விக்ராந்துக்கு, அவரது நிஜ வாழ்க்கை ஆர்வத்தை ஒத்த இக்கதாபாத்திரம் ஒரு சிறந்த 'கம்பேக்' கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 
Edited by Mahendran