திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 23 மார்ச் 2018 (22:17 IST)

அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்களில் நானும் ஒருவன் – சிம்பு

‘அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்களில் நானும் ஒருவன்’ எனத் தெரிவித்துள்ளார் சிம்பு.
 
தயாரிப்பாளர்கள் நடத்திவரும் வேலை நிறுத்தம் குறித்து நேற்று முன்தினம் இயக்குநர்கள் சங்கத்துடன் ஆலோசனை நடைபெற்றது. இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் சிம்பு, யாரும் எதிர்பாராத விதமாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய சிம்பு, “நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதால் பெரிதாக எதுவும் ஆகிவிடப் போவதில்லை. தமிழ் சினிமாவில் 10 நடிகர்கள் மட்டுமே அதிக சம்பளம் வாங்குகின்றனர். கடவுள் புண்ணியத்தில் நானும் அதில் ஒருவன்” எனத் தெரிவித்துள்ளார்.