ஹன்சிகா மீது புகார் கொடுத்த மேனேஜர்
சம்பளம் தரவில்லை என்று ஹன்சிகா மீது புகார் கொடுத்துள்ளார் அவருடைய மேனேஜர்.
சிம்ரன், மாளவிகா உள்பட சில தமிழ் நடிகைகளுக்கு மேனேஜராக இருந்தவர் முனுசாமி. ஹன்சிகாவுக்கும் இவர்தான் மேனேஜராக இருந்தார். இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஹன்சிகா மீது புகார் கொடுத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார் முனுசாமி.
‘இதுவரை பணியாற்றிய படங்களுக்காக ஹன்சிகா எனக்கு சம்பளம் தரவில்லை. எனவே, அதை வாங்கித்தரும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த ஹன்சிகா, ‘எங்கேயும் காதல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்தவருக்கு, தற்போது பெரிதாக வாய்ப்புகள் எதுவும் இல்லை. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘குலேபகாவலி’. தற்போது விக்ரம்பிரபு ஜோடியாக ‘துப்பாக்கி முனை’ படத்திலும், அதர்வா ஜோடியாக பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார் ஹன்சிகா.