திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 23 நவம்பர் 2018 (10:37 IST)

சிரிக்க வைக்க வருகிறார் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' - புதிய போஸ்டர் வெளியீடு

அறிமுக இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ரெஜினா நடித்து வரும் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'  படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
 
 'முண்டாசுப்பட்டி' ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது. இதனிடையே  காமெடிக்கு முக்கியத்துவம் மிகுந்த 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'  படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வந்தார். இதில் அவருக்கு ஜோடியாக ரெஜினா மற்றும் ஓவியா நடித்து வந்தனர்.  கருணாகரன், யோகி பாபு, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், சிங்கமுத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  இந்த படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார்.  அவரே இந்த படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். விரையில் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது- இந்நிலையில்   'சிலுக்குவார்பட்டி சிங்கம்'  படத்தின் புதிய போஸ்டர் வெளியாகிறது.