திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 20 நவம்பர் 2018 (20:56 IST)

விஷாலுக்கு எதிர்ப்பு: தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விலகிய ஆர்.கே.சுரேஷ்

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டது முதல் தயாரிப்பாளர்களின் பல பிரச்சனைகளை விஷால் தீர்த்து வைத்த போதிலும் அவருக்கு ஒருசில தயாரிப்பாளர்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சிறிய பட்ஜெட்டில் திரைப்படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு விஷால் ஆதரவாக இல்லை என்றும், ஆன்லைன் பைரஸியை தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கையை அவர் எடுக்கவில்லை என்றும் ஒருசிலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் சற்றுமுன் ராஜினாமா செய்துள்ளார். அவருடன் நடிகர் உதயாவும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சிறு பட தயாரிப்பாளர்களை பாதுகாக்க விஷால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி இருவரும் ராஜினாமா செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த தீபாவளி அன்று வெளியான ஆர்.கே.சுரேஷின் 'பில்லா பாண்டி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.