15 கிலோ எடை குறைத்து சின்னப்பையனான சிம்பு!
சிம்பு நடிக்கவுள்ள வெந்து தணிந்தது காடு படத்துக்காக மேலும் 15 கிலோ எடை குறைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கௌதம் மேனன் – சிலம்பரசன் காம்போவில் முன்னதாக விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் ஹிட் அடித்த நிலையில் அடுத்து இருவர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, வேல்ஸ் ப்லிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. முன்னதாக இந்த படத்துக்கு நதிகளில் நீராடும் சூரியன் எனப் பெயர் வைக்கப்பட்டது.
இந்த படத்தின் மூலமாக இயக்குனர் கௌதம் மேனன் முதல் முதலாக கிராமத்துக் கதை ஒன்றை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக சிம்பு 15 கிலோ எடை குறைத்துள்ளதாக இயக்குனர் கௌதம் மேனன் பகிர்ந்துள்ளார்.