1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 7 ஆகஸ்ட் 2021 (10:32 IST)

சிம்பு படத்துக்கு முதலில் வைக்க இருந்த தலைப்பு… ட்ரோலுக்கு பயந்து மாற்றம்!

நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படத்துக்கு வெந்து தணிந்தது காடு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கௌதம் மேனன் – சிலம்பரசன் காம்போவில் முன்னதாக விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் ஹிட் அடித்த நிலையில் அடுத்து இருவர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, வேல்ஸ் ப்லிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. முன்னதாக இந்த படத்துக்கு நதிகளில் நீராடும் சூரியன் எனப் பெயர் வைக்கப்பட்டது.

ஆனால் கதைக்களம் மாற்றப்பட்ட நிலையில் பெயரை மாற்ற வேண்டிய சூழல் உருவானது. இதற்காக முதலில் அக்னி குஞ்சொன்றைக் கண்டேன் என்ற பெயரைதான் யோசித்தார்களாம். ஆனால் அந்த பெயரை வைத்தால் ட்ரோல்கள் உருவாகும் என்பதால்தான் வெந்து தணிந்தது காடு என வைத்தார்களாம். இரண்டுமே பாரதியார் பாடலில் வரும் வரிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.