நாளை சிம்புவின் அடுத்த ரிலீஸ்; ரசிகர்கள் கொண்டாட்டம்
சிம்பு படம் ரிலீஸ் தினம் என்றாலே அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்ட தினமாக இருந்து வரும் நிலையில் நாளையும் சிம்பு ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்ட தினமாக அமைந்துள்ளது.
நடிப்பு மட்டுமின்றி இசை உள்பட பல துறைகளில் ஈடுபாடுள்ள சிம்பு, அவ்வப்போது தனிப்பாடல்களை வெளியிட்டு அசத்தி வருவது தெரிந்ததே. மேலும் 'பீப் பாடல்' போன்ற சர்ச்சைக்கும் அவர் ஆளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அவரது தனிப்பாடல் ஒன்று நாளை வெளியாகவுள்ளது.
தந்தை பெரியாரின் பெருமைகளை கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 'பெரியார் குத்து' என்ற பாடலை சிம்பு, பாடி நடித்துள்ள நிலையில் இந்த பாடல் நாளை வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடலாசிரியர் மதன்கார்க்கி எழுதிய இந்த பாடலுக்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார். இந்த பாடல் சிம்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.