1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (21:20 IST)

சிம்புவின் ‘பத்து தல’ ரிலீஸ் எப்போது? அதிரடி அறிவிப்பு

pathu thala
சிம்பு நடித்த பத்து தல என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
 
இந்த நிலையில் பத்து தல படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்று ரசிகர்கள் காத்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. 
 
சிம்பு நடித்த படத்தின் ரிலீஸ் தேதி நாளை காலை 11 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
 
இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு கௌதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கிருஷ்ணா இயக்கி உள்ளார் என்பதும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Mahendran