மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிப் போன அருண் விஜய்யின் படம்!
பிரபல நடிகர் அருண்விஜய் நடித்த பார்டர் என்ற திரைப்படம் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயுள்ளது.
பிரபல இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த பார்டர் திரைப்படம் . இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.
இப்படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் பார்டர் திரைப்படத்தின் டீசர் ட்ரெய்லர் சிங்கிள் பாடல் ரிலீஸ் பணிகளையும் படக்குழுவினர் விரைவில் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ரிலீஸாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.