திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (16:11 IST)

எனக்கும் சிம்புக்குக்கும் கல்யாணம் ஆகிடுச்சு - ஐஸ்வர்யா தத்தா!

நடிகை ஐஸ்வர்யா தத்தா விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் எனக்கும் சிம்புவுக்கும் திருமணம் ஆகிவிட்டதாக கூறி அதிரவைத்துள்ளார்.
 
தமிழ் சினிமாவில் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வைரலாக பேசப்படுபவர் சிம்பு. இவர் நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகளை காதலித்து பிரிந்துவிட்டார். அவர்கள் இருவருக்குமே திருமணம் ஆகிவிட்டது. 
 
அவ்வளவு ஏன் நயன்தாராவுக்கு குழந்தை கூட பிறந்துவிட்டது. ஆனால், சிம்புவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ஐஸ்வர்யா தத்தாவிடம் பிரியங்கா உங்களை பற்றி வெளிவந்த நகைச்சுவையான விஷயம் ஒன்றை சொல்லுங்கள் என்றார். 
 
அதற்கு அவர், எனக்கும் சிம்புவுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்றார்கள். என கூறி சிரித்தார். உடனே சாக்ஷி, நான் தான் விராட் கோலியின் முன்னாள் காதலி என்றார்கள் என கூற மாகாபா எடு செருப்பை என காண்டாகிவிட்டார். எல்லார் மைனஸ் வாய்ஸ் அதே தான். இதோ அந்த வீடியோ: