செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (21:14 IST)

சன் டிவியில் ‘பொன்னியின் செல்வன்’ தேதி அறிவிப்பு

Ponniyin selvan
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் நூறு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் தமிழில் இதுவரை வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ’பொன்னியின் செல்வன்’ பெற்றுள்ளது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தெரிவித்த தகவல் வெளியாகி உள்ளது.
 
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 8ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனையடுத்து இந்த படத்திற்காக ஏராளமான விளம்பரங்களும் குவிந்து வருவதாக கூறப்படுகிறது
 
Edited by Siva