சிவகார்த்திகேயன் படத்தால் தாமதமாகும் சிம்பு படம்… கமல்ஹாசன் எடுத்த முடிவு!
பத்து தல படத்துக்குப் பிறகு சிம்பு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் மட்டுமே இதுவரை ரிலீஸானது. படத்தின் ஷூட்டிங் தொடங்குவதாக தெரியவில்லை.
இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வரும் அமரன் படத்தை முடித்த பின்னரே இந்த படத்தை தொடங்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளாராம். அதனால் இந்த படம் தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. அதனால் சிம்பு இப்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.